search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசை வீடு"

    ஏழ்மை காரணமாக குடிசையில் வசிக்கும் பாஜக எம்எல்ஏ, புதிய வீடு கட்டுவதற்காக பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #BJPMLA #SitaramAdivasi
    விஜய்பூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ சீதாராம். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளார். குடிசையில் வசிக்கும் அவர் ஏற்கெனவே இரண்டுமுறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அந்த பகுதி மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளவர் என்பதால் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவருக்கு கட்சி தலைமை மீண்டும் சீட் வழங்கியது.

    ஆனால் இந்த முறை மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர். எம்.எல்.ஏ ஆன பின்பும் தனது குடிசை வீட்டிலேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

    எம்.எல்.ஏ ஆன பிறகாவது வேறு வீட்டில் குடியிருக்கலாமே என பலர் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்பதால் அவர்களின் கோரிக்கையை மறுத்து விட்டார்.

    இந்த வி‌ஷயம் வெளியில் தெரிய அந்த பகுதி கிராம மக்கள், கட்சி நிர்வாகிகள், அவரின் ஆதரவாளர்கள் என பலரும் பணம் வசூலித்து சீதாராமுக்கு புதிதாக வீடு கட்ட உதவி புரிந்துள்ளனர். தலா 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கி உள்ளனர்.



    சீதாராமுக்கு இந்த மாதம் தான் முதல் சம்பளம் வர உள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வரவுள்ள தனது சம்பளத்தையும் தொகுதி மக்களுக்கு செலவு செய்வதாக ஏற்கெனவே கூறி இருந்தார். ஆனால் அந்தப் பணத்தை வேண்டாம் என்று கூறியுள்ள அந்த பகுதி மக்கள், அதையும் வீடு கட்ட வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் சீதாராம் புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கி உள்ளார்.

    சீதாராம் தனது வேட்பு மனு தாக்கலில் தெரிவித்த சொத்து விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. ‘25,000 ரூபாய் ரொக்கமாக கையிலும், 21,000 ரூபாய் வங்கியிலும் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் அவருக்கு சொந்தமாக 600 சதுர அடியில் குடிசை வீடும், இரண்டு ஏக்கர் நிலமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    மக்கள் உதவி செய்துள்ளது குறித்து எம்.எல்.ஏ சீதாராம் கூறுகையில், ‘சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு என் கையில் பணம் இல்லை. முதல் மாதச் சம்பளமும் இன்னும் வரவில்லை. என் நிலைமையை அறிந்து மக்கள் அனைவரும் எனக்கு வீடு கட்ட உதவியுள்ளனர்.

    இப்போது மட்டும் உதவவில்லை. நான் தேர்தலில் வெற்றிபெற்றபோதே, என் எடைக்கு நிகராக காசுகளை அன்பளிப்புச் செய்தனர். அந்த பணத்தை வைத்துதான் அப்போது என் குடிசையைப் பராமரித்தேன். இப்போதும் என் முதல் மாத சம்பளத்தை வேண்டாம் என மக்கள் கூறியுள்ளனர்” என நெகிழ்ந்து கூறியுள்ளார். #BJPMLA #SitaramAdivasi
    திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சித்தாளம்பூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளித்ததால் வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அவர் வீட்டின் மேற்கூறை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார் ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் மற்றும் குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. #tamilnews
    ×